/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரூர் அருகே மினி லாரி விபத்து: டிரைவர் கைதுஅரூர் அருகே மினி லாரி விபத்து: டிரைவர் கைது
அரூர் அருகே மினி லாரி விபத்து: டிரைவர் கைது
அரூர் அருகே மினி லாரி விபத்து: டிரைவர் கைது
அரூர் அருகே மினி லாரி விபத்து: டிரைவர் கைது
ADDED : செப் 03, 2011 12:14 AM
அரூர்: அரூர் அருகே நேற்று முன்தினம் மணமக்கள் வந்த மினி லாரி கவிழ்ந்து மணப்பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். அரூர் அடுத்த தீர்த்தமலை அருகே நேற்று முன்தினம் திருமண கோஷ்டியினர் வந்த மினி லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், மணப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். விபத்து நடந்த மினி லாரி டிரைவர் கோட்டப்பட்டியை சேர்ந்த சங்கர் (32) தப்பி ஓடி தலைமறைவனார். நேற்று அரூர் போலீஸார் டிரைவர் சங்கரை கைது செய்தனர். விபத்து நடந்த இடம் மற்றும் வாகனத்தை தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பதுவைநாதன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்து குறித்து காயமடைந்த அரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற் வருபவர்களிடம் கேட்டறிந்தார். நேற்று முன்தினம் உயிரிழந்த சின்னவலசையை சேர்ந்த சந்தோசம், அக்கரைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் ஆகியோரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இருவரது உடலையும் கோட்டப்பட்டி வரை மட்டுமே வாகனத்தில் கொண்டு செல்லமுடியும்.
அதற்கு மேல் 8 கி.மீ., மலைப்பகுதியில் ஒற்றையடி பாதையில் தான் ஆட்கள் மூலம் கொண்டு செல்ல முடியும். இப்பகுதிக்கு போக்குவரத்து, சாலைவசதி, மின்சார வதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இக்கிராமங்களில் இல்லை எனவும் 150 குடும்பங்கள் வசிக்கும் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இறந்தவர்கள் பிரேதங்களை கட்டில்களை தூக்கி கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.


