/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/பொதுஅமைதிக்கு பங்கம்: ஐ.ஜே.கே., உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவுபொதுஅமைதிக்கு பங்கம்: ஐ.ஜே.கே., உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
பொதுஅமைதிக்கு பங்கம்: ஐ.ஜே.கே., உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
பொதுஅமைதிக்கு பங்கம்: ஐ.ஜே.கே., உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
பொதுஅமைதிக்கு பங்கம்: ஐ.ஜே.கே., உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு
ADDED : அக் 12, 2011 02:39 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை சேர்ந்த தர்மலிங்கம்(35).
இந்திய ஜனநாயக கட்சி உறுப்பினரான தர்மலிங்கம், வி.கைகாட்டியில் உள்ள நான்கு
ரோடு பிரிவு பாதையில் நின்று கொண்டு, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு
போட வேண்டும் என, மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக, சத்தம் போட்டு
பேசி ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தார். கடந்த 9ம் தேதி நடந்த
இச்சம்பவத்தை அடுத்து, அவ்வழியே ரோந்து சென்ற போலீஸார், தர்மலிங்கத்தை
எச்சரித்தும் பலனில்லை. இதையடுத்து அரியலூர் சிமெண்ட் ஆலை போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட தர்மலிங்கம் மீது, பொது அமைதிக்கு பங்கம்
விளைவித்ததாக, எஸ்.ஐ., புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில், இந்திய
குற்றவியல் தண்டனை சட்டம் 110வது பிரிவின்கீழ், சிமெண்ட் ஆலை போலீஸார்
வழக்கு பதிவு செய்தனர். அரியலூர் ஆர்.டி.ஓ., ஜேம்ஸ் செல்லையா
விசாரிக்கிறார்.


