/உள்ளூர் செய்திகள்/வேலூர்/கற்பழிப்பு வழக்கு: பள்ளி தாளாளர் "லேப்டாப்' பறிமுதல்கற்பழிப்பு வழக்கு: பள்ளி தாளாளர் "லேப்டாப்' பறிமுதல்
கற்பழிப்பு வழக்கு: பள்ளி தாளாளர் "லேப்டாப்' பறிமுதல்
கற்பழிப்பு வழக்கு: பள்ளி தாளாளர் "லேப்டாப்' பறிமுதல்
கற்பழிப்பு வழக்கு: பள்ளி தாளாளர் "லேப்டாப்' பறிமுதல்
ADDED : செப் 04, 2011 12:23 AM
வேலூர்: கற்பழிப்பு புகாருக்குள்ளான பள்ளி தாளாளரின், 'லேப்டாப்'பை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் அடுத்த அணைக்கட்டு ஊணை வாணியம்பாடியை சேர்ந்த இளம் பெண் செண்பக வள்ளி, தன்னை கற்பழித்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸார் காட்பாடி சன் பீம் மெட்ரிக்குலேஷன் மேல் நிலை பள்ளி தாளாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளருமான அரி கோபாலன், அதே கட்சி ஆவணங்கள் பாதுகாப்பு பிரிவு செயலாளர் பிலிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செண்பக வள்ளி கொடுத்த புகாரில், பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பள்ளி தாளாளர் அரி கோபாலிடம் காட்பாடி இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் அரி கோபாலின், 'லேப்டாப்', பள்ளி அறையில் இருக்கும் அவரது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்கையும் போலீஸார் பறிமுதல் செய்து தடய அறிவியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவற்றில் செண்பக வள்ளி தொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்கள் ஏதாவது இருக்கின்றதா? அவை அழிக்கப்பட்டிருந்தால் அவற்றை வெளிக்கொண்டு வர தடய இயல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


