/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மன்னையில் மாநில பளுதூக்கும் போட்டி :வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்கல்மன்னையில் மாநில பளுதூக்கும் போட்டி :வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்கல்
மன்னையில் மாநில பளுதூக்கும் போட்டி :வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்கல்
மன்னையில் மாநில பளுதூக்கும் போட்டி :வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்கல்
மன்னையில் மாநில பளுதூக்கும் போட்டி :வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்கல்
ADDED : ஆக 12, 2011 01:24 AM
மன்னார்குடி: திருவாரூர் மாவட்ட பளு தூக்கும் சங்கம் மற்றும் மன்னார்குடி எம்.ஆர்.டி.
உடற்பயிற்சி மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி மன்னார்குடியில் நடந்தது. போட்டியை மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் வக்கீல் துரை வீரையன் துவக்கி வைத்தார். போட்டிகள் 50, 56, 62, 69, 77, 85, 94 கிலோ எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று பெண்களுக்கு 44, 48, 53, 58, 63, 69, 69 கிலோ எடை பிரிவுகளில் நடத்தப்பட்டன. ஆண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் தூத்துக்குடி மனோஜ்குமார் முதலிடமும், திருவள்ளூர் பிரதீப்ராஜ் இரண்டாமிடமும், விழுப்புரம் அரவிந்தன் மூன்றாமிடமும் பெற்றனர். திருவள்ளூர் ராஜன் 56 கிலோ எடை பிரிவில் முதலிடமும், பிரபாகரன் இரண்டாமிடமும், வேலூர், அருள்வேல் மூன்றாமிடமும் பெற்றனர். வேலூர் தங்கராசு 62 கிலோ எடை பிரிவில் முதலிடமும், திருவண்ணாமலை பாலாஜி இரண்டாமிடமும், வேலூர் ராஜேஷ் மூன்றாமிடம் பெற்றனர். திருவள்ளூர் கார்த்திக் 69 கிலோ எடை பிரிவில் முதலிடமும், தூத்துக்குடி கருத்தப்பாண்டி இரண்டாமிடமும், திருவண்ணாமலை தமிழரசன் மூன்றாமிடமும் பெற்றனர். திருவண்ணாமலை விக்னேஷ் 77 கிலோ எடை பிரிவில் முதலிடமும், லோகேஷ் இரண்டாமிடமும், தூத்துக்குடி சரவணகுமார் மூன்றாமிடம் பெற்றனர். திருவண்ணாமலை சிவக்குமார் 85 கிலோ எடை பிரிவில் முதலிடமும், வேலூர் ராஜ்குமார் இரண்டாமிடமும், சேலம் அருண்குமார் மூன்றாமிடம் பெற்றனர். வேலூர் பிரதீப்குமார் 94 கிலோ எடை பிரிவில் முதலிடமுயும், திருவண்ணாமலை பிரசாந்த் இரண்டாமிடமும் பெற்றனர்.
பெண்களுக்கான 44 கிலோ எடை பிரிவில் சேலம் ராஜேஸ்வரி முதலிடத்தையும், வேலூர் கோடீஸ்வரி இரண்டாமிடத்தையும், திருவாரூர் தர்மாம்பாள் மூன்றாமிடத்தையும், 48 கிலோ எடை பிரிவில் திருவண்ணாமலை கலைவாணி முதலிடத்தையும், வேலூர் நந்தினி இரண்டாமிடத்தையும், தேவி மூன்றாமிடத்தையும் பெற்றனர். சேலம் பிரியா 53 கிலோ எடை பிரிவில் முதலிடமும், வேலூர் சாரதா இரண்டாமிடமும், அரியலூர் மேகலா மூன்றாமிடமும், 58 கிலோ எடைபிரிவில் சேலம் பிரியா முதலிடத்தையும், ரேவதி இரண்டாமிடத்தையும், கரூர் சுவேதா மூன்றாமிடத்தையும், 63 கிலோ எடை பிரிவில் அரியலூர் கனிமொழி முதல் இடத்தையும், சேலம் கதீஜா பேகம் இரண்டாமிடத்தையும், தஞ்சாவூர் ஷீலா மூன்றாமிடத்தையும் பெற்றனர். சேலம் மோகனா 69 கிலோ எடை பிரிவில் முதலிடத்தையும், தனலெட்சுமி இரண்டாமிடத்தையும், மதுரை குணசுந்தரி மூன்றாமிடத்தையும், 69 கிலோ எடை பிரிவில் சேலம் அன்பரசி முதலிடத்தையும், அரியலூர் பிரியங்கா இரண்டாமிடத்தையும், திருவாரூர் ஸ்ரீநிதி மூன்றாமிடத்தையும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தமிழ்செல்வன், டாக்டர் தையல் நாயகி பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். விழாவில், நீலன் மெட்ரிக் பள்ளி தாளாளர் அசோகன், டாக்டர் பாலகிருஷ்ணன், குத்துச்சண்டை கிளப் செயலாளர் முஸ்தபா உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் அன்வர்தீன் நன்றி கூறினார்.


