
பாட்டீலுக்கு ஏற்பட்ட நெருக்கடி!மும்பையில் குண்டு வெடிப்பு நடந்து, ஒரே பரபரப்பும், அதிர்ச்சியும் நிலவிய நேரத்தில், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சரான, ஆர்.ஆர்.பாட்டீலை மட்டும், அங்கு காணோம்.
விமான ஊழியர்கள், அதற்கு அனுமதிக்கவில்லை.'விமானம் புறப்படுவதற்கான அனுமதி, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்து விட்டது. இனிமேல், நீங்கள், விமானத்தில் இருந்து இறங்க முடியாது'என, கண்டிப்பாக, கூறிவிட்டனர். ஏமாற்றம் அடைந்த பாட்டீல், கையைப் பிசைந்தவாறே, விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம், நாக்பூர் சென்றதும், அவரைச் சந்தித்த நாக்பூர் போலீஸ் கமிஷனர், அடுத்த விமானத்தில் மும்பை திரும்புவதற்கான டிக்கெட்டை, தயாராக எடுத்து வைத்திருந்தார். அதில் ஏறி, ஒருவழியாக நள்ளிரவில் மும்பை வந்து சேர்ந்தார். பயணத்தின்போது, யாருடனும் பேசாமல், தண்ணீர் கூட குடிக்காமல், ஒருவித படபடப்புடனேயே, அமர்ந்திருந்தாராம், பாட்டீல்.பதவியில் இருந்தால் எவ்வளவு நெருக்கடி பாருங்கள்...!