Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலி மதுபானம் தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

போலி மதுபானம் தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

போலி மதுபானம் தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

போலி மதுபானம் தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

ADDED : ஆக 22, 2011 12:10 AM


Google News
.காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் போலி மதுபானம் தயாரித்த அலெக்சாண்டர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இவரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இளையான்குடி அருகே சின்னதுகவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 46. இவர், தேவகோட்டை அருகே வளங்காவயலில், சேகர் என்பவர் குத்தகை எடுத்த 2.5 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பிடித்துள்ளார். அந்த நிலத்தில், போலி மதுபானம் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஜூன் 21ம் தேதி கூடுதல் எஸ்.பி., கண்ணன் தலைமையில் மதுவிலக்கு போலீசார், அங்கு ரோந்து சென்றனர். போலி மதுபானம் தயாரித்துக்கொண்டிருந்த அலெக்சாண்டர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள 525 லிட்டர் எரிசாராயம், காலி மதுபாட்டில்கள், லேபிள்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே கோவையில் பல்வேறு வழக்குகள் இருந்தன. இதையடுத்து, அலெக்சாண்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, பன்னீர்செல்வம் எஸ்.பி., முடிவு செய்தார்.கலெக்டர் ராஜாராம் உத்தரவுபடி, அலெக்சாண்டரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us