/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருட்டுகளை தடுக்க போலீசார் முயற்சி "க்ரைம் டீம்' அமைத்து கண்காணிப்புதிருட்டுகளை தடுக்க போலீசார் முயற்சி "க்ரைம் டீம்' அமைத்து கண்காணிப்பு
திருட்டுகளை தடுக்க போலீசார் முயற்சி "க்ரைம் டீம்' அமைத்து கண்காணிப்பு
திருட்டுகளை தடுக்க போலீசார் முயற்சி "க்ரைம் டீம்' அமைத்து கண்காணிப்பு
திருட்டுகளை தடுக்க போலீசார் முயற்சி "க்ரைம் டீம்' அமைத்து கண்காணிப்பு
ADDED : ஜூலை 25, 2011 09:15 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் திருட்டு, வழிப்பறியை தடுக்க, 'க்ரைம் டீம்' அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தொழில் நகரமான திருப்பூரில், வீடு புகுந்து திருட்டு மற்றும் வழிப்பறி திருட்டுகள் அடிக்கடி நடக்கின்றன. பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து, பூட்டுகளை உடைத்து புகுந்து கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, இரவு நேரங்களில் தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி பணம், நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பொது இடங்களில் மற்றும் வீடுகளில் நிறுத்தப்படும் டூவீலர்களும் திருடு போகின்றன. குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேரங்களில் 'பீட்' போலீசார், பேட்ரால் ரோந்து போலீசார், பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர்; திருட்டுகள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும், திருப்பூரில் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருட்டுகள் தொடர்வதால், அத்திருட்டுகளை தடுக்க 'க்ரைம் டீம்' அமைக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு சப்-டிவிஷனிலும் டி.எஸ்.பி., மேற்பார்வையில், அந்தந்த பகுதி ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 'க்ரைம் டீம்' அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகள்; அன்னிய நபர்களின் நடமாட்டம்; பழங்குற்றவாளிகள் பதுங்கியுள்ள இடங்கள்; சந்தேக நபர்கள் குறித்து முழு விவரம் சேகரித்தல், திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தற்போதைய நடவடிக்கையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.