Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மும்பை தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து தீவிரம்

மும்பை தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து தீவிரம்

மும்பை தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து தீவிரம்

மும்பை தாக்குதல் எதிரொலி கடலில் ரோந்து தீவிரம்

ADDED : ஜூலை 15, 2011 09:54 PM


Google News

ராமநாதபுரம் : மும்பை தாக்குதலை தொடர்ந்து கடல்மார்க்கமாக ஊடுருவல் இருக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவலால், தமிழக கடல் பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மும்பையில் ஜூலை 13ல் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்து பலர் பலியாயினர்.

தீவிரவாத கும்பலின் இச்செயலால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கடல்மார்க்கமான ரோந்து பணியை முடுக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, கடலோர காவற்படை, மெரைன் போலீசார் ஆகியோர் ராமேஸ்வரம் கடற்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.மெரைன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலில் மீனவர்கள் போர்வையில் தீவிரவாதிகள் வருகின்றனரா, என்பதை கண்காணிக்கிறோம். கடலில் யாரேனும் தத்தளித்து உதவி கேட்டால் உடனடியாக தகவல் தர மீனவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். தற்போது மன்னார் வளைகுடாவில் பலத்த காற்றுவீசுவதால் அப்பகுதியில் ரோந்து செல்ல முடியவில்லை. வடக்கு பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர , இந்திய கடற்படைகளும் கூடுதல் ரோந்து செல்கின்றனர், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us