நிலம் தருவதாக ரூ. 5 கோடி மோசடி நடிகை விஜயசாந்தி மீது புகார் : போலீசார் விசாரிக்க கோர்ட் உத்தரவு
நிலம் தருவதாக ரூ. 5 கோடி மோசடி நடிகை விஜயசாந்தி மீது புகார் : போலீசார் விசாரிக்க கோர்ட் உத்தரவு
நிலம் தருவதாக ரூ. 5 கோடி மோசடி நடிகை விஜயசாந்தி மீது புகார் : போலீசார் விசாரிக்க கோர்ட் உத்தரவு

சென்னை : நிலம் தருவதாக ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை விஜயசாந்தி மீது, ஓட்டல் அதிபர் அளித்த புகார் மனு மீது கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர்.
அந்த மனுவில், 'சென்னை தி.நகர் பகுதி, டாக்டர் நாயர் சாலையில் உள்ள இரண்டு கிரவுண்டு நிலத்திற்கான பவர் ஏஜென்டாக இருப்பவர் நடிகை விஜயசாந்தி. இந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்ட நடிகை விஜயசாந்தி, என்னிடம் ஐந்து கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இதற்காக விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை திடீரென வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதில், நடிகை விஜயசாந்தி உட்பட நான்கு பேருக்கு தொடர்பு உண்டு' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணையை துவங்கவுள்ளனர்.