Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/தக்கலை பீரப்பா தர்காவில் ஐகோர்ட் நீதிபதி

தக்கலை பீரப்பா தர்காவில் ஐகோர்ட் நீதிபதி

தக்கலை பீரப்பா தர்காவில் ஐகோர்ட் நீதிபதி

தக்கலை பீரப்பா தர்காவில் ஐகோர்ட் நீதிபதி

ADDED : செப் 13, 2011 12:13 AM


Google News

தக்கலை : சென்னை ஐகோர்ட் நீதிபதி இக்பால் தக்கலை பீரப்பா தர்காவில் பிரார்த்தனை செய்தார்.

குமரி மாவட்ட சமரச தீர்வு மைய கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் தக்கலையிலுள்ள பிர்முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்காவிற்கு வந்து பீரப்பா நினைவிடத்தில் நின்று பிரார்த்தனை செய்தார். நீதிபதியை தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா அசோசியேஷன் தலைவர் அப்துல்கபூர், செயலாளர் சிராஜிதீன், பொருளாளர் ஜெகபர் சாதிக் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பீரப்பா எழுதிய ஞானபுகழ்ச்சி பாடல் புத்தகத்தை நிர்வாகிகள் நீதிபதிக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட செசன்ஸ் நீதிபதி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us