Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : ஜூலை 13, 2011 12:00 AM


Google News
அறிவியல் ஆயிரம்

ஐரோப்பாவில் இல்லாத தாவரம்

'புற்களின் மூத்த சகோதரன்' என்ற சிறப்புப் பெயர் மூங்கிலுக்கு உண்டு. மூங்கில் மரம் என அழைக்கப்பட்டாலும், இது புற்கள் வகையைச் சேர்ந்தது.மூங்கில்கள் உலகின் எல்லா பாகங்களிலும் காணப்பட்டாலும், ஐரோப்பாக் கண்டத்தில் மூங்கில்கள் இல்லை. இந்தியாவில் கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் மூங்கில்கள் இல்லை.வெப்ப மண்டலக் காடுகளில் வறண்ட நிலப் பகுதிகளிலும், இவை வளரும் இயல்பைப் பெற்று உள்ளன. மூங்கில் இலைகளுக்காக யானைகள் மூங்கில் காட்டைச் சிதைக்கின்றன. சிங்கம், செந்நாய், காட்டெருது, சிறுத்தை ஆகிய விலங்கு களின் வாழ்விடமாக மூங்கில்கள் உள்ளன. இந்தியாவில் 2 கோடி ஏக்கர் பரப்பளவில் மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.

தகவல் சுரங்கம்

'பெயில்' இல்லாத ஜெயில்

இந்தியாவில் உள்ள சட்டங்களிலேயே, மிகவும் கடுமையான சட்டம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தடைச் சட்டமாகும்.இந்த வழக்கில் கைதானவர்களுக்கு எளிதில் 'பெயில்' கிடைக்காது. 1985ம் ஆண்டு தடா சட்டம் வந்த போதுதான், இந்தச் சட்டமும் வெளியிடப் பட்டது. 10 முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. இரண்டு முறை இதே வழக்கில் கைதானால் மரண தண்டனையும் விதிக்கப் படலாம். எனினும் 5 மடங்கு லாபம் எளிதில் கிடைப்பதால், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் எளிதில் இதை விட்டு விடுவதில்லை. இந்தியாவில் போதைப்பொருள் பரவல் குறித்து, முழுமையான சர்வே இதுவரை எடுக்கப் படவில்லை. எனினும் இந்தியாவில் பஞ்சாப், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில், போதைப் பொருள் விற்பனை பரவலாக நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us