Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்

ADDED : செப் 30, 2011 02:26 AM


Google News

கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு நேற்று அதிமுக, - தேமுதிக, - புதிய தமிழகம், - காங்., - மதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்த நிலையில் கவுன்சிலர் பதவிக்கும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ததால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசிநாள் என்பதால் காலை 10 மணி முதலே கடையநல்லூர் நகராட்சி அலுவலகம், பஞ்., யூனியன் அலுவலகம் முன் மனுத்தாக்கல் செய்தோர் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துலட்சுமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நகராட்சி கமிஷனர் அப்துல்லத்தீபிடம் தனது மனுவை தாக்கல் செய்தார்.



வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., நயினா முகம்மது, முன்னாள் நகராட்சி தலைவர் டாக்டர் சஞ்சீவி, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி மற்றும் வார்டு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தேமுதிக வேட்பாளராக நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயந்தி நேற்று தனது வேட்புமனுவை நகராட்சி தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். கட்சி தொண்டர்களுடன் அழைத்து வரப்பட்ட வேட்பாளருடன் முன்னாள் மாவட்ட செயலாளர் திருப்பதி, நகர செயலாளர் சரவணன், அமுதவேல் அதியமான், அய்யாத்துரை, சாந்தி ராமச்சந்திரன் உட்பட தேமுதிகவினர் பலர் கலந்து கொண்டனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி தனது மனுவை நகராட்சி தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்பாளருடன் புதிய தமிழகம் செயலாளர் ரமேஷ், மாணவரணி மகேஷ் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.



மதிமுக வேட்பாளராக கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சாந்தி நேற்று மனுவை தாக்கல் செய்தார். வேட்பாளருடன் நகர செயலாளர் குமார், முன்னாள் கவுன்சிலர் வேலாயுதம், யூசுப், மாவட்ட பிரதிநிதி முருகன், முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர். கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்., கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரா நேற்று காலை நகராட்சி தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார். வேட்பாளருடன் முன்னாள் யூனியன் தலைவர் அய்யாத்துரை, கடையநல்லூர் நகராட்சி தலைவர் காளிராஜ், மாவட்ட காங்.,தலைவர் முருகேசன், நகர செயலாளர்கள் சாமிநாதன், பட்டு, மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான், அத்துல்லாயூசுப், மாரிப்பாண்டி, வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us