Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றம் 4 நாட்களில் 676 ஏக்கர் மீட்பு

மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றம் 4 நாட்களில் 676 ஏக்கர் மீட்பு

மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றம் 4 நாட்களில் 676 ஏக்கர் மீட்பு

மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றம் 4 நாட்களில் 676 ஏக்கர் மீட்பு

ADDED : ஜூலை 14, 2011 09:31 PM


Google News

மூணாறு : மூணாறில் நான்கு நாட்களாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், 676.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு,விதிமுறைகள் மீறிய நான்கு ரிசார்ட்டுகளின் கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மூணாறு மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி கடந்த 11ம் தேதி துவங்கியது.

நான்கு நாட்களில் 676.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அரசு நிலம் என்ற போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் ஊராட்சியில் விதி முறைகளை மீறி கட்டப்பட்டு வந்த டீ கோர்ட், வண்டர்லாண்ட், காக்கநாடு, மெகபூப் போன்ற ரிசார்டுகளின் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று மூணாறு அருகே போதமேடு பகுதியில், பைசன்வாலி கிராமத்தில் பொட்டன்காடு தாவளத்தில் 71 ஏக்கர் நிலத்தை தேவிகுளம் சப் கலெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். அதன் அருகில் அரசு நிலத்தில் தனி நபர்கள் அனுமதி இன்றி வெட்டிய ரோட்டில், கற்களை அடுக்கி தடை ஏற்படுத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us