ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு முகாம்
ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு முகாம்
ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு முகாம்
ADDED : ஜூலை 19, 2011 10:11 AM

கோவை: கோவை நகர 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' சார்பில், ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு முகாம் நடந்தது.
போத்தனூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்த முகாமுக்கு, உதவி பொது மேலாளர் அருள்சாமி தலைமை வகித்தார். சென்னையிலுள்ள ஓய்வூதியம் செயல்படுத்தும் மையத்தின், உதவி மேலாளர் நாராயணசாமி, ஓய்வூதியம் வழங்கப்படும் முறைகள் குறித்து பேசினார். ஓய்வூதியம் வழங்க காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஓய்வூதியதாரர்கள் கேள்வி எழுப்பினர். வங்கியின் உதவி பொது மேலாளர் (அரசு தொழில்துறை) சண்முகம் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர். டாக்டர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ''நேரம் தவறாமல், உணவு உட்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு இருமுறை முழு உடல்பரிசோதனை செய்யலாம். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்,'' என்றார். உதவி பொது மேலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.புரம், மெயின் பிராஞ்ச், ஒப்பணக்கார வீதி, சிட்கோ எஸ்.எஸ்.ஐ., உள்பட 12 கிளைகளில் ஓய்வூதியம் பெறும், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மண்டல மேலாளர் கிருஷ்ணசாமி செய்திருந்தார்.


