Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மானமதுரையில் சிறுவர்களை கடத்த முயற்சி

மானமதுரையில் சிறுவர்களை கடத்த முயற்சி

மானமதுரையில் சிறுவர்களை கடத்த முயற்சி

மானமதுரையில் சிறுவர்களை கடத்த முயற்சி

ADDED : செப் 04, 2011 09:45 PM


Google News

மானமதுரை: மானமதுரையில் 4 சிறுவர்களை கடத்த முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானமதுரை உடைகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் முத்துச்செல்வம், சரவணகுமார் என்பவரது மகன் சக்திவேல்(12), ஜெகன்(5), ரகு என்பவரது மகன் கிஷோர் இவர்கள் 4 பேரும் உடைகுளம் பகுதியில் மதியம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், 4 பேரையும் பிஸ்கட் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார். மாலை மானமதுரை ரயில் நிலையத்தில் ரயில் மூலம் ராமேஸ்வரம் அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். இதனிடையே குழந்தைகளை காணாத பெற்றோரும், உறவினரும் குழந்தைகளை தேடத்துவங்கினர். குழந்தைகள் ரயில் நிலையத்தில் இருப்பதை அறிந்த பெற்றோர், சரவணனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மானமதுரை சிப்காட் போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us