/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டுஅரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
ADDED : அக் 11, 2011 02:39 AM
சேந்தமங்கலம்: பேளுக்குறிச்சி அரசு பள்ளியில், கதவை உடைத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு வாட்ச்மேனாக மோகன்காந்தி (35) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று, கம்ப்யூட்டர் அறை கதவை உடைத்து அங்கிருந்த, 5 கம்ப்யூட்டர்களை திருடிச் சென்றனர். அவற்றின் மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாய்.நேற்று காலை 8.30 மணிக்கு உள்ளே சென்ற வாட்ச்மேன் மோகன்காந்தி, கம்ப்யூட்டர் அறைக்கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, 5 கம்ப்யூட்டர்கள் மாயமாகி இருந்தது. இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர் ஜெயந்தியிடம் தெரிவித்தார். பேளுக்குறிச்சி போலீஸில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வாட்ச்மேன் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக, வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


