வாசிப்பை நேசிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை
வாசிப்பை நேசிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை
வாசிப்பை நேசிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அறிவுரை
ADDED : ஜூலை 19, 2011 10:14 AM
கோவை: 'சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், அனைத்து நாளிதழ்களையும் விடாமல் படித்து பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறினார்.
மாநகராட்சி உயர்கல்வி மன்றத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதால், இப்பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவ, மாணவியர் சேர்ந்து படித்து வருகின்றனர்.
கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி இம்மைய மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். சைபர் குற்றங்கள், மத்திய, மாநில உறவுகள், பயங்கரவாத தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், ''சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தமிழ், ஆங்கில நாளிதழ்களை நாள்தோறும் விடாமல் படிக்க வேண்டும். பிரதான தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தங்களை சுற்றிலும் நடைபெறும் அன்றாட விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.
உயர்கல்வி மன்றத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில்,''சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு, வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும். மொத்தம் ஒன்பது தாள்கள் கொண்ட இத்தேர்வுக்கு 2,000 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை இம்முறை 7,000 மாணவர்கள் சந்திக்கின்றனர்,'' என்றார்.


