ADDED : ஜூலை 13, 2011 04:14 AM
மதுரை:இந்தியாவில் கடந்தாண்டு 67.81 லட்சம் எக்டேரில் அரிசி
பயிரிடப்பட்டது. இந்தாண்டு 74.31 லட்சம் எக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளதால்,
ஒரு
லட்சம் மில்லியன் டன் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு
ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அரிசி விலை உயருகிறது.
மதுரையில் இந்த வாரமும் கடந்த வார விலையிலேயே அரிசி விற்பனை நடக்கிறது. ஆலை
உரிமையாளர் சங்க செயலாளர் சந்திரன் கூறியதாவது : ஒரு கிலோ காவிரி சோனா
டீலக்ஸ் பொன்னி ரூ.24.50, மதுரை டீலக்ஸ் பொன்னி பழசு ரூ.30, அடுத்த ரகம்
ரூ.23.50, வெள்ளை பொன்னி பழசு ரூ.35, செல்லப்பொன்னி ரூ.20.50, முத்து செல்ல
பொன்னி ரூ.18.50க்கும் விற்கப்படுகிறது.ஐ.ஆர்., இருபது ரூ.24, புதுசு
ரூ.21, ஐ.ஆர்., முப்பத்தாறு ரூ.19-20க்கும், மாவு பச்சரிசி ரூ.21.50க்கும்,
பிரியாணி அரிசி ரூ.45 - ரூ.52 வரையும் விற்கப்படுகிறது, என்றார்.


