Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அனுமதியில்லாமல் ஷூட்டிங் நடத்த முயற்சி நகராட்சியின் அதிரடியால் திடீர் "பேக்-அப்'

அனுமதியில்லாமல் ஷூட்டிங் நடத்த முயற்சி நகராட்சியின் அதிரடியால் திடீர் "பேக்-அப்'

அனுமதியில்லாமல் ஷூட்டிங் நடத்த முயற்சி நகராட்சியின் அதிரடியால் திடீர் "பேக்-அப்'

அனுமதியில்லாமல் ஷூட்டிங் நடத்த முயற்சி நகராட்சியின் அதிரடியால் திடீர் "பேக்-அப்'

ADDED : ஜூலை 24, 2011 02:48 AM


Google News

ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு எவ்வித அனுமதியும் பெறாமல் 'ஷூட்டிங்' நடத்தும் முயற்சி நடந்தது; நகராட்சி நிர்வாகத்தின் அதிரடியால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தின் எந்த ஒரு பகுதிகளிலும் சினிமா ஷூட்டிங் நடத்தவும் அனுமதி பெற வேண்டும்.

இதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்த, அந்தந்த அமைப்புகளில் அனுமதி பெற வேண்டும். இதன்படி, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஷூட்டிங் நடத்த ஒரு நாளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை செலுத்தி, கடந்த புதன் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை, மலையாள படப்பிடிப்பு குழுவினர் ஷூட்டிங் நடத்தி உள்ளனர். நேற்று சனிக்கிழமை என்பதால், ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்க முடியாத நிலை நகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்பட்டது. மேலும், முக்கிய அதிகாரிகளும் இல்லை.



இந்நிலையில், நேற்று காலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே எவ்வித அனுமதியும் பெறாமல் ஷூட்டிங் நடத்தும் ஏற்பாடுகளை ஷூட்டிங் குழுவினர் மேற்கொண்டனர். இதற்கென தனியான போலீஸ் வாகனம், 'டம்மி' போலீசார் உட்பட பலரும் அப்பகுதிக்கு வந்தனர். இவர்களுக்கு உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு அளித்தனர். இந்த தகவலை அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் ஷூட்டிங் நடத்தும் அனுமதி குறித்து கேட்டனர். அனுமதிக்கான எந்த ஆதாரமும் இலலாத நிலையில், 'அட்ஜெஸ்மென்டில்' ஷூட்டிங் நடத்த அனுமதி பெறும் முயற்சியில் ஷூட்டிங் நிர்வாகத்தினர் இறங்கினர். ஆனால், நகராட்சியில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் அனுமதியில்லாமல் ஷூட்டிங் நடத்தும் விபரம் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஷூட்டிங் நடத்தினால் பிரச்னை அதிகரிக்கும் என்பதால், வேறு வழியில்லாமல், ஷூட்டிங் குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து 'பேக்-அப்' ஆகினர்.'கடந்த காலங்களில் வேலை நாட்களான புதன் முதல் வெள்ளி வரை மட்டும் கட்டணம் செலுத்தி, விடுமுறை நாட்களில் 'அட்ஜெஸ்மென்டில்' ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்ததாகவும், இம்முறை தான் அதன் விபரம் நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிந்ததால், நகராட்சிக்கான நஷ்டம் தவிர்க்கப்பட்டுள்ளது,' என சில ஊழியர்கள் தெரிவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us