/உள்ளூர் செய்திகள்/சேலம்/மருத்துவ முகாமில் மாணவருக்கு வாந்தி, மயக்கத்தால் பரபரப்புமருத்துவ முகாமில் மாணவருக்கு வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு
மருத்துவ முகாமில் மாணவருக்கு வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு
மருத்துவ முகாமில் மாணவருக்கு வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு
மருத்துவ முகாமில் மாணவருக்கு வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 29, 2011 01:18 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பல் அரசு
மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தும்பல், பாப்பநாயக்கன்பட்டி,
இடையப்பட்டி உள்பட பல்வேறு மலைகிராம பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர்
படித்து வருகின்றனர். வாரம்தோறும் வியாழக்கிழமையில், மாணவருக்கு குடற்புழு
நீக்க சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,
நேற்று தும்பல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுரேஷ்குமார்
தலைமையிலான மருத்துவ குழுவினர், மாணவ, மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை
செய்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அப்போது, மருத்துவர்கள் கொடுத்த
மாத்திரைகளை சாப்பிட்ட ஐந்து மாணவ, மாணவியருக்கு 'அலர்ஜி' ஏற்பட்டு, கண்கள்
சிவந்துள்ளது. மேலும், மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அதையறிந்த மருத்துவ குழுவினர், மயக்கம் ஏற்பட்ட மாணவர்களுக்கு 'குளுக்கோஸ்'
இறக்கி மருத்துவ சிகிச்சை அளித்தனர். தகவலறிந்த மாணவரது பெற்றோர்கள்
ஏராளமானோர், தும்பல் பள்ளிக்கு வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டபோது,'மாணவர்களுக்கு
குடற்புழுக்கள் நீக்கம் செய்யும் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
அதில், சாப்பிடாமல் வந்த மாணவர்கள், மாத்திரைகளை சாப்பிட்டதால் அலர்ஜி
ஏற்பட்டது. அம்மாணவர்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு வேறு பாதிப்பு ஏற்படவில்லை' என்றனர்.


