Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கபடி போட்டி திசையன்விளை அணி முதலிடம்

கபடி போட்டி திசையன்விளை அணி முதலிடம்

கபடி போட்டி திசையன்விளை அணி முதலிடம்

கபடி போட்டி திசையன்விளை அணி முதலிடம்

ADDED : செப் 10, 2011 04:14 AM


Google News
திசையன்விளை : கபடி போட்டியில் திசையன்விளை அணி முதலிடம் பெற்றது.

திசையன்விளை அன்னை இந்திரா நினைவு 29வது ஆண்கள், பெண்கள் மின்னொளி கபடி போட்டி நேருஜி திடல் அருகே நடந்தது. போட்டிகளுக்கு திசையன்விளை டவுன் பஞ்.,தலைவர் சேம்பர் செல்வராஜ் தலைமை வகித்தார். பஞ்., துணைத் தலைவர் டிம்பர் செல்வராஜ், தங்கையா கணேசன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் முன்னாள் ஆளுநர் சுயம்புராஜன் வரவேற்றார். பிலிப்போஸ், அனிதா பிரின்ஸ், எட்வின், லிவிங்ஸ்டன், திருவடிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் ஆட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ.,அப்பாவு, இரண்டாம் நாள் ஆட்டத்தை ராதாபுரம் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் துவக்கி வைத்தனர். இதில் இறுதி ஆட்டத்தில் திசையன்விளை தங்கையா ஸ்வீட்ஸ் அணியினர் அபாரமாக விளையாடி முதலிடம் பெற்று கோப்பையை கைப்பற்றினர். இவ்வணிக்கு பரிசு தொகை ரூ.10 ஆயிரத்தை திசையன்விளை டவுன் பஞ்.,தலைவர் சேம்பர் செல்வராஜ், சுழற்கோப்பையை அதிமுக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினர். இரண்டாம் பரிசு ரூ.5001ஐ கூடன்குளம் கூடல் அணிக்கு ஆலிவ் வழங்கினார். மூன்றாம் பரிசு பெற்ற அளந்தங்கரை அணிக்கு ரூ.3001ஐ அரசு கூடுதல் வக்கீல் பழனிசங்கரும், நான்காம் பரிசு பெற்ற கூடன்குளம் காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.2001ஐ அன்பழகனும் வழங்கினர். பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற திருநாகுறிச்சி பி.கே.வி.சி. அணிக்கு ரூ.4001ஐ குருநாதனும், இரண்டாம் பரிசு பெற்ற அளந்தங்கரை அணிக்கு ரூ.3001ஐ பழனிமுருகனும், மூன்றாம் பரிசு பெற்ற கோட்டவிளை வி.கே.சி.அணிக்கு ராஜேசும், நான்காம் பரிசு பெற்ற நாகர்கோவில் அணிக்கு கண்ணனும் பரிசு வழங்கினர். ஆண்கள் சிறப்பு பரிசுகளை நகர தந்தை டாக்டர் எம்.எல்.ஆசீர்வாதம் நினைவாக தொழிலதிபர் சென்னை அஜீத் டிராவல்ஸ் சுதந்தர், பெண்கள் சிறப்பு பரிசுகளை ஐகோர்ட் வக்கீல் ஜெரோம் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னை இந்திரா கபடி குழு தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஜெபக்குமார், மூர்த்தி, ஆல்பர்ட், ராஜேந்திரன், ரமேஷ் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us