ADDED : ஜூலை 15, 2011 06:26 PM
புதுடில்லி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருளின் விலையை இன்று இரவு முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, டில்லியில், ஒரு கிலோ விமான எரிபொருளின் விலை 0.13 சதவீதம் அதிகரித்து 56,246.86 ரூபாய் என்ற அளவிலிருந்து 56,324.79 ரூபாய் என்ற அளவிற்கும், மும்பையில், ரூ. 56,964.01 என்ற அளவிலிருந்து ரூ. 57,031.66 என்ற அளவிற்கும் உயர்த்தப்படுகிறது. மாதந்தோறும் முதல் தேதி மற்றும் 16ம் தேதிகளில் விலை உயர்த்தப்படுவதன் அடிப்படையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


