தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை : நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்
தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை : நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்
தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை : நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்

குருவாயூர் : ''அடுத்தாண்டு நடைபெற உள்ள உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலில், ராஷ்டிரிய லோக்மஞ்ச் கட்சி வெற்றி பெற்றால், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, யானையை காணிக்கையாக வழங்குவேன்,'' என, நடிகையும், எம்.பி.,யுமான ஜெயப்பிரதா தெரிவித்தார்.
கேரளா திருச்சூர் மாவட்டத்திலுள்ள, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, திரைப்பட நடிகையும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெயப்பிரதா, சுவாமி தரிசனத்திற்காக, நேற்று முன்தினம் வந்தார்.
அவர் சார்ந்துள்ள ராஷ்டிரிய லோக்மஞ்ச் கட்சியின் நிறுவன தலைவர் அமர்சிங்கிற்காகவும், கோவிலில் அவர் காணிக்கை செலுத்தினார். சுவாமி தரிசனத்தை முடித்த பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''அடுத்தாண்டு உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ராஷ்டிரிய லோக்மஞ்ச் கட்சி போட்டியிடும். மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில், கட்சி சார்பில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்பு உண்டு. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானையை காணிக்கையாக வழங்குவேன். கேரளாவில் நடிகர் மோகன்லால் நடிக்கும், 'பிரணயம்' என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்துள்ளேன்,'' என்றார்.


