/உள்ளூர் செய்திகள்/தேனி/எம்.எல்.ஏ., குழுவிற்கு மனுக்கள் அனுப்பலாம்எம்.எல்.ஏ., குழுவிற்கு மனுக்கள் அனுப்பலாம்
எம்.எல்.ஏ., குழுவிற்கு மனுக்கள் அனுப்பலாம்
எம்.எல்.ஏ., குழுவிற்கு மனுக்கள் அனுப்பலாம்
எம்.எல்.ஏ., குழுவிற்கு மனுக்கள் அனுப்பலாம்
ADDED : ஜூலை 15, 2011 10:11 PM
தேனி : சட்டசபை எம்.எல்.ஏ.,க்களை உறுப்பினராக கொண்ட சட்டசபை மனுக்கள் குழு கூட்டம் விரைவில் தேனி மாவட்டத்தில் நடக்க உள்ளது.
இதனால் தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்னைகள், குறைகள் குறித்து ஐந்து பிரதிகள் எடுத்து மனுதாரர், தேதியுடன் கையெழுத்திட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழக சட்டசபை, சென்னை-9 என்ற முகவரிக்கு ஜூலை 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தனிநபர் குறை, கோர்ட்டில் வழக்கு உள்ள விஷயங்கள், வேலை வாய்ப்பு, பட்டா கேட்பது, முதி யோர் ஓய்வூதியம் கேட்பது, வங்கி கடன் தொழில் கடன் வேண்டுதல், அரசு பணி மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்தும் மனுக்களை அனுப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


