ADDED : ஜூலை 19, 2011 09:25 PM
கோவை : கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடபட்டது.மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னையன் தலைமையில் ரெட்பீல்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம்; மூத்த காங்கிரஸ் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு அலுவலகம்; முன்னாள் கவுன்சிலர் வெள்ளிங்கிரி தலைமையில் காந்திபார்க்; கோவை விஜயன் தலைமையில் பீளமேடு; இளைஞர் காங்கிரஸ் 14வது வார்டு தலைவர் ராமநாதன் தலைமையில் உடையாம்பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களும், சில இடங்களில் அன்னதானங்களும் வழங்கப்பட்டன. விழாவில், மேயர் வெங்கடாச்சலம், புறநகர் மாவட்டத் தலைவர் இருகூர் சுப்பிரமணியன், 72வது வார்டு தலைவர் சண்முகானந்தன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


