Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

திருப்பூர் சாயத்தொழில் பிரச்னை : 18ல் சென்னையில் ஆலோசனை

ADDED : ஜூலை 15, 2011 08:36 PM


Google News
திருப்பூர்: திருப்பூர் சாயத்தொழிலில் நிலவும் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மத்திய ஜவுளித்துறை செயலர் ரீட்டா மேனன், தமிழக தலைமை செயலருடன் வரும் 18ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் நடந்த ஜவுளித்தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் பங்கேற்று, பின்னலாடை வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ள சாயத்தொழில் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார். இது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்து பேசி, நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பில் சாயத்தொழில் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, வரும் 18ம் தேதி, ஜவுளித்துறை செயலர் ரீட்டா மேனன், தமிழக தலைமை செயலருடன் ஆலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தமிழக அரசின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து, மேல்நடவடிக்கை தொடரப்படும் என்றும் ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, திருப்பூர் சாயத்தொழில் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென தொழில் துறையினர் நம்பிக்கை அடைந்துள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us