Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/மும்பை குண்டு வெடிப்பு: தோனி கவலை

மும்பை குண்டு வெடிப்பு: தோனி கவலை

மும்பை குண்டு வெடிப்பு: தோனி கவலை

மும்பை குண்டு வெடிப்பு: தோனி கவலை

ADDED : ஜூலை 15, 2011 04:36 PM


Google News
டான்டன்: மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி.கடந்த 13ம் தேதி மும்பையில் மூன்று இடங்களில் அடுத்தடுத்த குண்டு வெடிப்பு நடந்தது.

17 பேர் கொல்லப்பட்ட இச்சம்பவத்தில், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுகுறித்து இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:மும்பை சம்பவம் மிகவும் சோகமானது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் எந்த இடம் அல்லது உலகத்தில் எங்கு நடந்திருந்தாலும், மிகவும் வருந்தத்தக்கது ஆகும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புகின்றேன். மும்பைக்கு இது மற்றொரு சோகமான நாள். இந்த துயரமான சம்பவத்தில் இருந்து, மும்பை மக்கள் மீண்டு, விரைவில் தங்களது இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று நம்புகின்றேன். தவிர, தனது பழைய வழக்கமான சிறந்த நிலைக்கு மும்பை திரும்ப வேண்டும்.இவ்வாறு தோனி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us