ADDED : ஜூலை 24, 2011 01:20 AM
தூத்துக்குடி : விளாத்திகுளம் தாலூகா புதூர் யூனியனில் உள்ள சிவலார்பட்டி பஞ்.,ல் பஞ்., அளவிலான கூட்டமைப்பிற்கு வங்கிபெருங்கடனாக ரூ.10லட்சம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் மூலம் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.நிகழ்ச்சியில் மெர்க்கன்டைல் பாங்க் மேலாளர் தனபால், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மாவட்ட திட்ட மேலாளர் லாரன்ஸ், வாழ்ந்துகாட்டுவோம் திட்ட புதூர் பகுதி அணித்தலைவர் சந்திரசேகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், மகளிர்சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கூட்டமைப்பு தலைவர் மங்களம் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


