/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தெருவில் கழிவுநீர் தேக்கம் : நோய் பரவும் அபாயம்தெருவில் கழிவுநீர் தேக்கம் : நோய் பரவும் அபாயம்
தெருவில் கழிவுநீர் தேக்கம் : நோய் பரவும் அபாயம்
தெருவில் கழிவுநீர் தேக்கம் : நோய் பரவும் அபாயம்
தெருவில் கழிவுநீர் தேக்கம் : நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 13, 2011 10:08 PM
தொண்டி : தொண்டி சிவன்கோயில் தெருவில் சாக்கடை தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொண்டி பேரூராட்சியில் சிவன் கோயில் தெரு வழியாக தான் பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட், பள்ளிவாசல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இத்தெருவில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி உள்ளது. ஓடை போன்ற குழிகளில் கழிவுநீரை தாண்டும் போது, சில மாணவர்கள் அதில் விழுந்து அவதிப்படுகின்றனர். இந்த தெருவில் மட்டும் ரோடு அமைக்கப்படவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இத்தெருவில் சிமென்ட் ரோடு அமைத்து, கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


