Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வீடு புகுந்து நகை பறிப்பு: முகமூடி திருடர்கள் கைவரிசை

வீடு புகுந்து நகை பறிப்பு: முகமூடி திருடர்கள் கைவரிசை

வீடு புகுந்து நகை பறிப்பு: முகமூடி திருடர்கள் கைவரிசை

வீடு புகுந்து நகை பறிப்பு: முகமூடி திருடர்கள் கைவரிசை

ADDED : ஜூலை 13, 2011 04:10 AM


Google News
செக்கானூரணி:வீடு புகுந்து ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டி நகையை பறித்துச் சென்ற முகமூடி திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். செக்கானூரணி அருகே உள்ள கே.புளியங்குளம் ஒத்தவீட்டை சேர்ந்தவர் தேவராஜ்(68). இவரது மனைவி பேச்சியம்மாள்(63). இவர்களது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை பூட்டிக்கொண்டு 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்த போது முகமூடி அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர்.

நகை, பணம் உள்ளதா? என்று வீடு முழுவதும் தேடினர். கிடைக்காததால் பேச்சியம்மாள் காதில் அணிந்திருந்த தோடு, தாலி கயிற்றில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு, தாலி மட்டும் வேண்டாம் என்று கூறி னர். பின்னர் தேவராஜ், பேச்சியம்மாளை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர். செக்கானூரணி போலீசில் தேவராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, எஸ்.ஐ.மாரிமுத்து, போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். *செக்கானூரணியில் சில நாட்களுக்கு முன்பு வீட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபர்கள், தப்பிச்செல்லும் வழியில் வாசல் தெளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி., அஸ்ராகர்க் உத்தரவின் பேரில் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, எஸ்.ஐ.,கள் புகழேந்தி, செந்தில் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us