/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"உள்ளேன் ஐயா!' பென்ஷனருக்கு புது சலுகை"உள்ளேன் ஐயா!' பென்ஷனருக்கு புது சலுகை
"உள்ளேன் ஐயா!' பென்ஷனருக்கு புது சலுகை
"உள்ளேன் ஐயா!' பென்ஷனருக்கு புது சலுகை
"உள்ளேன் ஐயா!' பென்ஷனருக்கு புது சலுகை
ADDED : ஜூலை 13, 2011 10:09 PM
கோவை : 'உயிரோடு இருப்பதை மாவட்ட கருவூலத்துக்கு தெரிவிக்க விரும்பும்
ஓய்வூதியர்கள், இனி உரிய படிவத்தில் ஆயுள் சான்று பெற்று அனுப்பினால்
போதும்' என, மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அரசுத் துறைகளில்
பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம்
வழங்கப்படுகிறது. தாங்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய, ஆண்டுக்கு ஒருமுறை
மாவட்ட கருவூலத்துக்கு இவர்கள் நேரில் ஆஜராக வேண்டும். ஓய்வு பெற்ற சில
ஆண்டுகளுக்கு தனியாக அங்குமிங்கும் சென்று வரும் ஓய்வூதியர்கள், உடல்
நலிவுற்ற பின், வெளியே செல்ல பிறரின் உதவியை நாட வேண்டியதுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளை வாங்க பல ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம்தான்
கைகொடுக்கிறது. உயிரோடு இருப்பதை எப்பாடு பட்டாவது நேரில் சென்று உறுதி
செய்ய வேண்டிய நிலையில், ஓய்வூதியர்கள் உள்ளனர். நோயுற்று, மாதக்கணக்கில்
படுத்த படுக்கையாக இருப்பவர்கள், உயிரோடு இருந்தும் அதை நிரூபிக்க
முடிவதில்லை. வயோதிகர்களின் இந்த பிரச்னைக்கு தீர்வு அளித்துள்ளார், கோவை
மாவட்ட கலெக்டர் கருணாகரன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாவட்ட
கருவூலத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களில், உடல்நிலை நலிவுற்ற
காரணத்தால் நேரில் வர முடியாதவர்கள், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அரசு
அலுவலர்களிடம் உரிய படிவத்தில் 'ஆயுள் சான்று' பெற்று, ஜூலை 31க்குள்
மாவட்ட கருவூலத்துக்கு அனுப்பி வைத்தால் போதும்' என, கூறியுள்ளார்.


