ஜூன் மாதத்தில் ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு
ஜூன் மாதத்தில் ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு
ஜூன் மாதத்தில் ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூலை 15, 2011 01:49 PM
புதுடில்லி : இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மொத்தம் 59, 200 டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் கொள்முதல் செய்யப்பட்ட ரப்பரின் அளவு 6 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த மாதம் 80,500 டன் ரப்பர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரப்பர் உற்பத்தி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டின் இதே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 56,850 டன் ரப்பரை விட தற்போது ரப்பர் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


