/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
ADDED : அக் 06, 2011 01:17 AM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் வீடு புகுந்து திருடிய மர்மநபர்கள்
கத்தியை காட்டி தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தியாகதுருகம் அடுத்த
கரீம்ஷா தக்காவை சேர்ந்தவர் அயில்குமார், 40. டிரைவரான இவர் நேற்று
முன்தினம் இரவு வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். இவரது மனைவி பாரதி,33
மட்டும் வீட்டில் தனியாக படுத்திருந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு
பின்பக்க தாழ்பாளை உடைத்து 2 மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்தனர். பீரோவை
உடைத்து 12 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற போது சத்தம் கேட்டு பாரதி
கண்விழித்தார். பீரோ உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து, பக்கத்து தெருவில்
வசிக்கும் கொழுந்தனார் செந்தில்குமாருக்கு மொபைல்போன் மூலம் தகவல்
கொடுத்தார். அவர் நண்பர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிளில் சென்று
தேடியபோது, ஊர் எல்லையில் இரண்டு நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை
மடக்கிபிடிக்க முயன்றபோது மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டிபடி மோட்டார்
சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இது குறித்த செந்தில்குமார் தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார்.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., சரவணக்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.
இச்சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


