/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதியார் பல்கலைக்கு ரூ.9 கோடி உதவிபாரதியார் பல்கலைக்கு ரூ.9 கோடி உதவி
பாரதியார் பல்கலைக்கு ரூ.9 கோடி உதவி
பாரதியார் பல்கலைக்கு ரூ.9 கோடி உதவி
பாரதியார் பல்கலைக்கு ரூ.9 கோடி உதவி
ADDED : ஆக 03, 2011 01:34 AM
கோவை : பாரதியார் பல்கலைக்கு அறிவியல் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ஒன்பது கோடி ரூபாயினை இந்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறை-புதுடில்லி சார்பில் கிடைக்கவுள்ளது.
இதில் முதல் தவனையாக ரூபாய் மூன்று கோடி கிடைத்துள்ளது.இது குறித்து பல்கலையின் அறிக்கை: புதுடில்லியிலுள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, சமீபத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு அறிவியல் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய் ஒன்பது கோடியினை வழங்கியுள்ளது. இது கடந்த 1998 முதல் 2008ம் ஆண்டு வரை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறிவியல் துறை பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கட்டுரை வெளியீடுகளின் தர அடிப்படையில் வழங்கப்படும் உதவித் தொகையாகும். இந்த தொøகையானது ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் பல்வேறு வகையான கருவிகள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை பணியில் அமர்த்தி கொள்ளவும் பயன்படுத்தப்படும். சர்வதேச அளவிலான ஆராய்ச்சி வெளியீடுகளின் தர நிர்ணயம் செய்யும் 'ண்ஞிணிணீதண்' அமைப்பின் அண்மை வெளியீட்டின் அடிப்படையில், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையினால், தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 சிறந்த பல்கலை கழகங்களில் ஒன்றாக பாரதியார் பல்கலை கழகத்தை அங்கீகரித்து இந்த உதவியினை வழங்கி உள்ளது. தற்போது முதல் தவணையாக மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


