/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
ADDED : ஆக 09, 2011 02:55 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், வெளிநாட்டில் மேல்படிப்பிற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் பத்ரிஸ்ரீமன்நாராயணன் தலைமை வகித்தார்.
இங்கிலாந்து எஸ்ஸெக்ஸ் பல்கலை உறுப்பு கல்லூரியான விரிட்டில் கல்லூரி சர்வதேச மாணவர் நலன் பேராசிரியர் ஹமீதுகர்ப்பா பேசுகையில், 'வேளாண் சார்ந்த படிப்புகளில், விலங்கியல், தாவரவியல், உயிர்தொழில்நுட்பவியல் ஆகிய மாணவர்களுக்கு வாய்ப்புள்ளது.என்.ஜி.எம்., கல்லூரி, வாணவராயர் வேளாண்மை கல்லூரி ஆகிய கல்லூரிகளுடன் விரிட்டில் சர்வதேச கல்லூரியுடன் வரும் செப்., மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது என்றார். விலங்கியல் துறை தலைவர் தனலட்சுமி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மின் வணிகவியல் துறை சார்பில் 'கருப்புபணம் உருவாதலின் காரணங்கள், மின் சாதனங்களின் பயன்பாடுகள்' கருத்தரங்கு நடந்தது. கபூர் வரவேற்றார். முதல்வர் தலைமை வகித்தார். கோவை சி.பி.எம்., கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பெரியசாமி, கோவையை சேர்ந்த ஆடிட்டர் ராஜ்சேகர் பேசினர். கல்லூரி இயக்குனர் சுப்ரமணியன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.சங்கீதா நன்றி கூறினார்.


