Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/10 ஆயிரம் பேருக்கு கல்லீரல் நோய் பரிசோதனை

10 ஆயிரம் பேருக்கு கல்லீரல் நோய் பரிசோதனை

10 ஆயிரம் பேருக்கு கல்லீரல் நோய் பரிசோதனை

10 ஆயிரம் பேருக்கு கல்லீரல் நோய் பரிசோதனை

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

சென்னை : சென்னையில், 10 ஆயிரம் பேருக்கு, கல்லீரல் நோய் பரிசோதனை செய்ய, சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை கூறியதாவது:உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, சென்னை துறைமுகம் சட்டசபைத் தொகுதியில், பல்வேறு இடங்களில், கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில், 1500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 51 பேருக்கு உயிர்க்கொல்லி நோய்களான, 'ஹெப்படைடிஸ் பி' மஞ்சள் காமாலை நோயும், 19 பேருக்கு, 'ஹெப்படைடிஸ் சி' மஞ்சள் காமாலை நோயும் இருப்பது தெரியவந்தது. இதன்மூலம், 5 சதவீதம் பேருக்கு, கல்லீரல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்களைத் தொடர்ந்து நடத்த, முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு கல்லீரல் நோய் பரிசோதனை செய்யப்படும். மேலும், ஹெப்படைடிஸ் நோய் தடுப்பூசி போடவும் ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு, கனகசபை கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us