மன்மோகன் சிங் - ஹிலாரி சந்திப்பு : இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சு
மன்மோகன் சிங் - ஹிலாரி சந்திப்பு : இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சு
மன்மோகன் சிங் - ஹிலாரி சந்திப்பு : இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சு

கிருஷ்ணா - ஹிலாரி சந்திப்பு : பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு உதவி செய்யும். என்றும், பாகிஸ்தான் உடனான இந்திய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா துணை நின்று நல்ல வழிப்பிறக்க ஊக்குவிக்கும் என்றும் டில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வலியுறுத்தியதோடு பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானும் முக்கிய நட்பு நாடாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், டில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக ஐதராபாத் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
எஸ்.எம்., கிருஷ்ணா பேட்டி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறுகையில், பயங்கரவாதம் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையேயான உறவு இன்னும் வலுப்பெற வேண்டும். அணு சக்தி துறையில் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.. பொருளாதார ஒத்துழைப்பை விரிவு படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளது. உலக அளவில் மற்றும் பிராந்திய அளவிலான பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆப்கனில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதி திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். டிரை வேலி பல்கலை விவகாரத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை இந்தியா அமெரிக்கா இடையே நடந்த 2வது கட்ட பேச்சவார்த்தையில் பயங்கரவாதம் குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டது.ஐ.நா.,வில் இந்தியா நிரந்த உறுப்பினர் பதவி பெற அமெரிக்காவுடன் ஆலோசனை செய்யப்பட்டது என கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பேட்டி :
மும்பை வெடிகுண்டு சம்பவம் கொடூரமான செயலாக அமெரிக்கா கருதுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பேராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தடைகளை குறைக்க வேண்டும். கடல் பாதுகாப்பும் பலப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு உதவி செய்யும்.அணுசக்தி துறையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.உலக அளவு மற்றும் பிராந்திய அளவில் இந்தியா வளர்ந்த நாடாக அமெரிக்கா கருதுகிறது. என கூறினார் ஹிலாரி .
இதன் பின்னர் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன், இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் தன்னிச்சையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் எளிதாக வெளியேற எந்த அரசும் அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் முக்கிய நட்பு நாடாக உள்ளது.அணுசக்தி பாதுகாப்பு மையத்தில் இந்தியா உறுப்பு நாடாக அமெரிக்கா ஆதரவளிக்கும். அணுசக்தி பாதுகாப்பு மையத்தின் புதிய விதிகள் இந்தியாவை நேரிடையாக பாதிக்காது. ஆப்கனில் அதிகாரத்தை ஒப்படைப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும். இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
நாளை ( புதன்கிழமை ) சென்னைக்கு வரும் ஹிலாரி அமெரிக்க வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். முதல்வர் ஜெ.,வை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


