டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு
டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு
டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2011 10:31 PM
தேவாரம் : தேவாரம் மெயின் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவாரம் மெயின் ரோட்டில் 50 மீ., இடைவெளியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. தேவாரம் சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை, பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல இந்த ரோட்டை கடந்து செல்ல வேண்டும். இதனால் மக்கள் நடமாட்டம் மெயின் ரோட்டில் அதிகளவில் இருக்கும். டாஸ்மாக் கடை பார்களுக்கு செல்லும் குடிமகன்கள் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
புதிய தமிழகம் ஒன்றிய நிர்வாகி தங்கப்பாண்டியன் கூறியதாவது: பள்ளி முடிந்து மாணவிகள் செல்லும்பாதையில் குடிமகன்கள் ரோட்டை மறித்து நின்று தகராறு செய்கின்றனர். விபத்துகளும் நடக்கிறது. கடைகளை வேறு இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்ற வேண்டும்,'என்றார்.


