/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/எல்லை மாறியதால் பராமரிப்பு மறந்த ரோடுஎல்லை மாறியதால் பராமரிப்பு மறந்த ரோடு
எல்லை மாறியதால் பராமரிப்பு மறந்த ரோடு
எல்லை மாறியதால் பராமரிப்பு மறந்த ரோடு
எல்லை மாறியதால் பராமரிப்பு மறந்த ரோடு
ADDED : அக் 08, 2011 10:50 PM
வடமதுரை : நத்தம் கோட்டத்திற்கு மாற்றப்பட்ட வடமதுரை- காணப்பாடி ரோடு பராமரிப்பின்றி மோசமாக உள்ளது.
வடமதுரை- காணப்பாடி ரோடு, சில மாதங்களுக்கு முன் வரை, வேடசந்தூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் இருந்தது. சாலை பணியாளர்கள் அவ்வப்போது வந்து சீரமைப்பு பணிகளை செய்து வந்தனர். தற்போது ரோடு நத்தம் உட்கோட்டத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு பின், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணி செய்யவில்லை. இதனால் வடமதுரை- காணப்பாடி ரோடு சந்திப்பு அருகில், பல இடங்களில் தார் ரோட்டின் நடுவிலும், ஓரத்திலும் 'மெகா' பள் ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆட்டோக்கள் பல இந்த பள்ளங்களில் தடுமாறி கவிழ்ந்து பலர் காயமடைந்துள்ளனர். ரோடு பராமரிப்பு இல்லாததால், சில மாதங்களுக்கு முன், நர்ஸ் ஒருவர் கணவருடன் பைக்கில் சென்ற போது, பள்ளத்தில் தடுமாறி பஸ்சில் சிக்கி இறந்தார். உயிர்ப்பலியை தடுக்க ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.


