ADDED : ஜூலை 14, 2011 12:12 AM
உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டையிலுள்ள கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வளர் பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சிவலிங்கம், பிரகன் நாயகி அம்மனுக்கு தீபாராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ் செய்திருந்தார்.


