/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிப்பு : தினமும் மாலையில் மழைஉள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிப்பு : தினமும் மாலையில் மழை
உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிப்பு : தினமும் மாலையில் மழை
உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிப்பு : தினமும் மாலையில் மழை
உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிப்பு : தினமும் மாலையில் மழை
ADDED : அக் 03, 2011 11:01 PM
தேனி : தினமும் மாலையில் மழை பெய்வதால், உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் காலை 6 மணிக்கு பிரசாரம் தொடங்கி 10 மணி வரை பிரசாரம் செய்கின்றனர். இந்த நேரத்தில் வீதி, வீதியாக சென்று மக்களை சந்திக்கின்றனர். காலை 10 மணியில் இருந்து 4 மணி வரை காரில் சென்று முக்கிய வி.ஐ.பி.,க்களை மட்டும் சந்திக்கின்றனர். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திரும்பவும் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து ஓட்டு கேட்கின்றனர். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருகிறது. இதனால் மாலை நேரம் பிரசாரம் செய்ய முடியவில்லையே என வேட்பாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


