Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வார்டு பிரித்தலை பரிசீலிக்க பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

வார்டு பிரித்தலை பரிசீலிக்க பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

வார்டு பிரித்தலை பரிசீலிக்க பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

வார்டு பிரித்தலை பரிசீலிக்க பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 11, 2011 09:32 PM


Google News
திருப்பூர் : ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மாநகராட்சியில் 60 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வார்டு பிரித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வார்டு பிரித்ததில் ஏற்பட் டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்து, சரியான பட்டியலை வெளியிட வேண்டுமென இ.கம்யூ.,கோரிக்கை விடுத்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில், திருப்பூர் மாநகராட்சியில் நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சிகள், எட்டு ஊராட்சிகள் இணைகின்றன. இதன் காரணமாக, தற்போதுள்ள 52 வார்டு, 60 வார்டு களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகை, எதிர்கால நகர வளர்ச்சியை கணக்கிட்டு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஒரு வார்டில் குறைவாகவும், ஒரு வார்டில் அதிகமாகவும் வாக்காளர்கள் இருப்பதாக கட்சிகள் தரப்பில் தெரி விக்கப்படுகிறது. இதன் காரணமாக, வார்டு பிரித்ததை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இ.கம்யூ., திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: திருப்பூர் மாநகராட்சி வார்டு எல்லைகள் அதிகாரிகளால் பிரிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளிடம் கருத்து கேட்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது. சில தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. தற்போதுள்ள 25, 27, 29வது வார்டுகளை இணைத்து, புதிதாக 46வது வார்டு பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 25, 27வது வார்டுகள் நொய்யல் ஆற்றின் ஒரு கரையிலும், 29வது வார்டு மற்றொரு கரையிலும் உள்ளன. மூன்று வார்டுகளையும் ஒரே வார்டாக இணைத்திருப்பது தவறான நடைமுறை. மேலும், நிர்வாக ரீதியாகவும் பல சிக்கல்களை உருவாக்கும். புதிதாக பிரிக்கப்பட்ட 46வது வார்டில், தற்போதுள்ள 25, 27வது வார்டுகளை மட்டுமே இணைக்க வேண்டும் என்று இ.கம்யூ., வலியுறுத்துகிறது. மேலும், 6, 7, 9வது வார்டுகளை இணைத்து புதிதாக 26வது வார்டு பிரிக்கப்பட்டுள்ளது. அதையும் ரத்து செய்துவிட்டு, 6, 7 ஆகிய இரண்டு வார்டுகள் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். புதிய வார்டு எண் 31ல், தற்போதைய 37,38,39,40 ஆகிய நான்கு வார்டு கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், 38,39,40 ஆகிய மூன்று வார்டுகள் மட்டுமே இருக்க வேண்டும். தமிழக முதல்வர், இப்பிரச்னையை உடனடியாக பரிசீலித்து, மேற்கண்ட தவறுகளை நிவர்த்தி செய்து, சரியான பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். காங்கிரசார் அதிருப்தி: புறநகர் மாவட்ட காங்., தலைவர் (பொறுப்பு) கோபி, மாநகர் மாவட்ட தலைவர் (பொறுப்பு) சித்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாநகராட்சியில் சில வார்டுகளில் குறைந்த வாக்காளர்களும், பல வார்டுகளில் அதிக வாக்காளர்களை கொண்டும் வார்டு எல்லையை அறிவித்துள்ளதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வார்டு பிரிப்பதில் முறையான அணுகுமுறை கடைபிடிக்கா மல், ஆளும்கட்சி மற்றும் சிலரின் தூண்டுதல்படி செயல்பட்டிருப்பதை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேர்மையான முறையில் அனைத்து வார்டுகளிலும் வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்ச அளவில் வரைமுறை அமைத்து, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் முறையில் பிரித்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும், என்று தெரிவித்துள்ளனர். மறுபரிசீலனை தேவை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சையத் முஸ்தபா அறிக்கை: திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே இருந்த 52 வார்டுகள், தற்போது 24 மாநகராட்சி வார்டுகளாக மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த எல்லைகளாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இது, ஒட்டுமொத்த சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமையை பறிப்பதாகும். நிலப்பரப்பை கணக்கில் கொள்ளாமல், வாக்காளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் வார்டுகளை பிரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த மாநகராட்சியில், முந்தைய மாநகராட்சியின் 52 வார்டுகள், சேர்க்கப்படும் மூன் றாம் நிலை நகராட்சிகளின் 36 வார்டுகள், எட்டு ஊராட்சிகளில் இருந்து 32 வார்டுகள் என 120 வார்டுகள் பிரிக்கும்போது அவற் றில் வசிக்கும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையான 5.48 லட்சம் வாக்காளர்களை, வார்டுக்கு 9,200 வீதம் 60 வார்டுகளாவோ அல்லது 7,600 வாக்காளர்கள் என்ற வீதத்தில் 72 வார்டுகளாவோ பிரிக்கலாம், என்று கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us