ADDED : ஜூலை 14, 2011 12:14 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கிங் நிறுவனத்தினரின் வீட்டு உபயோகப் பொருட்காட்சி நடந்து வருகிறது.
விழுப்புரம் பஸ் நிலையம் அருகே திருச்சி கிங் நிறுவனம் சார்பில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடந்து வருகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் பொருட்காட்சியில் வீட்டு உபயோக பொருட்களின் கடைகள் குவிக்கப்பட்டுள்ளது. அழகு சாதன பொருட்களும், புத்தகங்களும், பொழுது போக்கு அம்சங்க ளாக ஜெயண்ட் வீல், பிரேக்டான்ஸ், டிராகன், ஜம்பிங் பலூன், ரயில், ஹெலிக்காப்டர் ராட்டினங்களும், திகிலூட்டும் பேய் வீடும் உள்ளது. பொருட்காட்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, ராஜா, குமார் செய்துள்ளனர். துணை இயக்குனர்கள் கிருஷ்ணராஜ், கீதா, மாவட்ட கல்வி தொடர்பு அலுவலர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


