கடலூர்:பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சமச்சீர் கல்விக்காக போராடி சிறை சென்றவர்களுக்கு பாராட்டு மற்றும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் கணேசன் சிறப்புரையாற்றினார்.


