/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாநில அரசுகளை துச்சமாக மதிக்கும் மத்திய அரசு :பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டுமாநில அரசுகளை துச்சமாக மதிக்கும் மத்திய அரசு :பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு
மாநில அரசுகளை துச்சமாக மதிக்கும் மத்திய அரசு :பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு
மாநில அரசுகளை துச்சமாக மதிக்கும் மத்திய அரசு :பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு
மாநில அரசுகளை துச்சமாக மதிக்கும் மத்திய அரசு :பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 14, 2011 12:17 AM
திருச்சி: ''மாநில அரசுகளை மத்திய அரச துச்சமாக நினைக்கிறது,'' என, பாரதிய ஜனதாக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஊழல், கறுப்புப்பணம், அரசின் செயலற்ற தன்மை ஆகியவை குறித்து பாரதிய ஜனதாக்கட்சி கேள்வி எழுப்பவுள்ளது. தற்போதைய மத்திய அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத, வெளிப்படையான நிர்வாகம் இல்லாததாக உள்ளது. மத்திய அரசு மக்களுக்கு தேவையான எதையும் செய்யவில்லை, அப்படியே செய்தாலும் மூடிமறைத்தே செய்கிறது. மத்திய அரசின் நிர்வாகத்தில் குறைபாடு உள்ளது என்பதை உள்துறை அமைச்சர் சிதம்பரமே ஒத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளது. எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி விவகாரம், வீணாகும் உணவு தானியங்கள் ஆகிய சிறிய விஷயங்களில் கூட மத்திய அரசால் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் தான் அந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு நல்ல நிர்வாகத்தக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. மறுசீரமைப்பில் அமைச்சர்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 2ஜி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்று தவறான தகவலை மக்களிடம் தெரிவித்தவர் இன்னும் மத்திய அமைச்சராக நீடிக்கிறார். ஆகையால், வரப்போகும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஊழல், கறுப்புப்பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கையிலெடுக்க போகிறோம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் பாரதிய ஜனதா பாராளுமன்றத்தில் கண்டிப்பாக குரல் கொடுக்கும். கர்நாடகா முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் மட்டுமே கூறப்படுகிறது. அவை அனைத்தும் ஆதாரம் இல்லாதவை. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது. வீணாக போகும் உணவு தானியங்களைக் கூட ஏழை மக்களுக்கு கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில் தான் ஆட்சி உள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் கச்சா பொருட்களின் விலை குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து விலையேற்றப்படுகிறது. பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோது பஞ்சகாலங்களில் உணவு தானியங்கள் மத்திய அரசால், மாநில அரசுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது விலைகொடுத்தாலும் கிடைப்பதில்லை. முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் நிர்வாகம் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகளை துச்சமாக மதிக்கிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாக்கட்சி போட்டியிடும். பாரதிய ஜனதா 2ஜி ஊழல் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் அளிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


