/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு நிர்ணயம் செய்த விலைக்கு நெல் கொள்முதல் செய்ய அழைப்புஅரசு நிர்ணயம் செய்த விலைக்கு நெல் கொள்முதல் செய்ய அழைப்பு
அரசு நிர்ணயம் செய்த விலைக்கு நெல் கொள்முதல் செய்ய அழைப்பு
அரசு நிர்ணயம் செய்த விலைக்கு நெல் கொள்முதல் செய்ய அழைப்பு
அரசு நிர்ணயம் செய்த விலைக்கு நெல் கொள்முதல் செய்ய அழைப்பு
ADDED : ஜூலை 14, 2011 01:37 AM
சேலம்: 'சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று, சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக நெல்லை கொள்முதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, 'ஏ' கிரேடு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு, 1,100 ரூபாயும், பொது கிரேடு குவிண்டால் ஒன்றுக்கு, 1,050 ரூபாயும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நிர்ணயித்த தரம் மற்றும் ஈரப்பதத்தில், நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும். நெல்லுக்கான விற்பனை தொகையை சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கும்.
எனவே, விவசாயிகள், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களை அணுகி பயனடையலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


