/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பருத்தியுடன் விவசாயிகள் காத்திருப்பு அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்பருத்தியுடன் விவசாயிகள் காத்திருப்பு அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்
பருத்தியுடன் விவசாயிகள் காத்திருப்பு அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்
பருத்தியுடன் விவசாயிகள் காத்திருப்பு அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்
பருத்தியுடன் விவசாயிகள் காத்திருப்பு அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 21, 2011 01:07 AM
அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், முன்கூட்டியே இடம் பிடிக்க விடிய விடிய பருத்தி மூட்டைகளோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தனர்.
நேற்று காலை சத்தி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடக்கும். அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள், சுரபி, பி.டி., காட்டன் ரக பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாரம் இரு நாட்கள் நடந்த ஏலத்தில், 1.5 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது. பருத்தி விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில், குடோனில் பாதுகாப்பாக வைக்க விவசாயிகளிடம் போட்டி நிலவுகிறது.அடுத்த வாரம் நடக்கும் ஏலத்துக்காக, நேற்று முன்தினம் இரவே ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். இவ்வாரம் ஏலம் போன பருத்தியை வியாபாரிகள் எடுத்து செல்லாததால், விற்பனைக் கூட நிர்வாகம் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பருத்தி மூட்டையுடன் லாரிகள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன. சத்தி ரோடு மற்றும் சிங்கார வீதியின் இருபுறமும் இவை நிறுத்தப்பட்டதால், நேற்று காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நிர்வாகத்துக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் உருவானது. அந்தியூர் போலீஸார் வந்தனர். இவ்வாரம் ஏலம் போன பருத்தி மூட்டைகளை வெளியே அனுப்பினர். அதன்பின், வெளியே காத்திருந்த விவசாயிகள் மூட்டைகளை உள்ளே கொண்டு சென்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் போக்குவரத்து சீரானது.


