குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 24, 2011 02:04 AM

தேனி : குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தேனி மாவட்டம், குச்சனூரில் சனீஸ்வர பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. சனீஸ்வர பகவான் இங்கு சுயம்பு வடிவானவர் என்பதால், கூடுதல் சக் கொண்டிருக்கிறார் என நம்பப்படுகிறது. ஏழரை ஆண்டுகளில் நீங்கும் துன்பங்கள், இங்கு வந்தால் ஏழரை நாழிகை பொழுதில் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
கொடியேற்றம்: இக்கோயில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னாள் அறங்காவலர் முத்துச்சோனை கொடி ஏற்றினார். ஏராளமான பக்தர்கள் சனீஸ்வரரை தரிசனம் செய்தனர். முல்லை பெரியாற்று கால்வாயில் தீர்த்தம் ஆடினர்.
திருக்கல்யாணம்: ஜூலை 30ல் 2ம் வார திருவிழாவும், ஆக. 5ல் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. ஆக. 20ல் ஐந்தாம் வாரத்திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது.
சிறப்பு பஸ்கள்: திருவிழாவை முன்னிட்டு சனிதோறும் தேனி, சின்னமனூர், உத்தமபாளையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தக்கார் சுரேஷ், செயல் அதிகாரி ராஜேந்திரகுமார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.