Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/டெக்னிஷியன் நல்வாழ்வு சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

டெக்னிஷியன் நல்வாழ்வு சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

டெக்னிஷியன் நல்வாழ்வு சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

டெக்னிஷியன் நல்வாழ்வு சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

ADDED : ஜூலை 14, 2011 12:30 AM


Google News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் டெக்னிஷியன்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரப் போராட்டம் நடந்தது.

மாநில பார்மஸி சங்க தலைவர் டாக்டர் துரை உண்ணாவிரத்தை துவக்கி வைத்தார். மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முரளி, பிரபு, ராஜேந்திரன், ஜெயகாந்தன், ரமேஷ், காளிதாசன், ராஜேஷ், வினோதா, சுந்தரி ஆகியோர் பேசினர். தமிழக அரசால் 2005ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை 5,000க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி முடித்துள்ளனர். பேரா மெடிக்கல் டெக்னிஷியர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் பதிவு செய்ய முறையான பதிவு எண் என்பது வழங்கபட வேண்டும். அனைத்து பிரிவு பேரா மெடிக்கல் டெக்னிஷியன்களுக்கும் வேலை வாய்ப்பு அரசு மருத்துவமனைகளில் உருவாக்கிட வேண்டும். தியேட்டர் டெக்னிஷியன்கள் மற்றும் இ.சி.ஜி., டெக்னிஷியன், டயாலிஸ், டெக்னிஷியன் போன்றவர்களுக்கு அனைத்து மருத்துவ கல்லூரி மற்றும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் பணி நியமனம் வழங்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் மற்றும் கொடிய நோய்கள் பரவும் அவரச காலங்களில் டெக்னிஷியன்களை முறையாக பயன்படுத்த வேண்டும். பயிற்சி முடித்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் பணி அமர்த்திட வேண்டும். பயிற்சி என்பது முறையாக அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும். எம்.என்.ஏ., எப்.என்.ஏ., மற்றும் சுகதார பணியாளர்களை டெக்னிஷியன்களாக பணி நியமனம் செய்வது தடை செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us