/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இ.யூ.மு.லீக் போட்டியிடும் உள்ளாட்சி பதவி விபரம்இ.யூ.மு.லீக் போட்டியிடும் உள்ளாட்சி பதவி விபரம்
இ.யூ.மு.லீக் போட்டியிடும் உள்ளாட்சி பதவி விபரம்
இ.யூ.மு.லீக் போட்டியிடும் உள்ளாட்சி பதவி விபரம்
இ.யூ.மு.லீக் போட்டியிடும் உள்ளாட்சி பதவி விபரம்
ADDED : செப் 27, 2011 11:40 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் மாவட்ட தலைவர் அன்வர் பாஷா வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி
நகராட்சியில் நான்கு மற்றும் ஐந்தாம் வார்டுகள் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து
தலைவர் மற்றும் இரண்டு மற்றும் மூன்று வார்டு உறுப்பினர் பதவி, பென்னாகரம்,
மாரண்டஹள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், பாலக்கோடு மற்றும் தளவாய்அள்ளி ஆகிய
ஊர்களில் முஸ்லிம் பகுதி வார்டுகளில் போட்டியிட வேட்பாளர்களிடம் இருந்து
விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அரூர், பொம்மிடி,
பி.துரிஞ்சிப்பட்டி, தென்கரைக்கோட்டை மற்றும் பாப்பாரப்பட்டி ஆகிய ஊர்களில்
வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்களை
போட்டியிட செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வெற்றிக்காக
பிரச்சாரம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்வது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


